ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு |
நடிகை மீனா தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர். தற்போதும் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் நடித்த த்ரிஷியம் படம் பெரிய வெற்றி பெற்றது. திருமணமாகி செட்டிலாகிவிட்ட மீனா தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.
பெரிய பட்ஜெட்டில் தெலுங்கு, தமிழ் மொழியில் ஒரே நேரத்தில் படம் தயாரிக்க இருக்கிறார். இதற்காக தயாரிப்பு நிறுவனம் துவங்கும் முயற்சியில் பிசியாக இருக்கிறார். முதல் படத்தில் கமலஹாசனும், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் இணைந்து நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக மீனா கமலஹாசனையும், மகேஷ் பாபுவையும் சந்தித்து பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனது தயாரிப்பு நிறுவனம் பற்றியும், முதல் படம் பற்றியும் மீனா விரைவில் முறைப்படி அறிவிக்க இருக்கிறார்.