பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படம் வார்கிராப்ட். டன்கன் ஜோன்ஸ் இயக்கி உள்ள இந்தப் படத்தை லெகண்டரி பிக்சர்ஸ், பிஸ்ரத் எண்டர்டெயின்மெண்ட், அட்லஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ரமின் தேஜ்வாடி இசைஅமைத்துள்ளார், சைமன் டக்கன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிராவிஸ் பிம்மல், பவுலா பட்டன், பென் போஸ்டர், டொமின் ஹ¨ப்பர் உள்பட பலர் நடித்துள்ளர்.
பூமி அல்லாத இன்னொரு கிரகத்தில் மனிதர்கள் நாகரீகத்தோடு வாழ்கிறார்கள். அதன் பக்கத்து கிரகத்தில் ராட்சத அரக்கர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் மனிதர்களை வீழத்தி தங்களுக்கு அடியாக்க நினைக்கிறார்கள். இந்த யுத்தத்தில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை. சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி உள்ளது படம். இதுவரை இல்லாத அளவிற்கு முப்பரிமாண அனிமேஷன் காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் யுனிவர்சல் பிக்சர்ஸ் வருகிற 10ந் தேதி வெளியிடுகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழியிலும் வெளிவருகிறது. 3டி தொழிலநுட்பத்துடனும் ரிலீசாகிறது. தமிழில் 'சக்கரவியூகம்' என்ற பெயரில் ஹன்சா பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.