சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நடிகர் விவேக் ஓபராய், ராம் கோபால் வர்மா அடுத்து இயக்க உள்ள ராய் படத்தில் முத்தப்பா ராய் என்ற தாதா வேடத்தில் நடிக்க போகிறார் என ஏற்கனவே கூறி இருந்தோம். சமீபத்தில் இப்படம் பற்றி பேட்டி ஒன்றில் கூறிய விவேக் ஓபராய், தாதா வேடங்களில் நடிப்பது எப்போதுமே எனக்கு கிக் ஆன அனுபவத்தை தருகிறது. அந்த உணர்வை வார்த்தைகளில் கூற முடியாது. இதுவரை 3 சூப்பர்ஹிட் படங்களில் நான் தாதாவாக நடித்துள்ளேன். இது போன்ற தாதா வேடங்களில் என்னை பார்ப்பதை எனது ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்றார். இதற்கு முன், பிலிம் கம்பெனி, சூட்அவுட் அட் லோகந்த்வாலா மற்றும் ராத் சரித்ரா ஆகிய படங்களில் விவேக் ஓபராய் தாதா வேடங்களில் நடித்துள்ளார்.