ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெட்ராஸ், கதகளி, கணிதன் படங்களில் நடித்தவர் கேத்ரின் தெரசா. அதையடுத்து, வீர தீர சூரன், கடம்பன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விஷ்ணுவுடன் நடிக்கும் வீர தீர சூரனில் வழக்கமான நாயகி வேடம்தான் என்றாலும், ஆர்யாவுடன் நடித்து வரும் கடம்பன் படத்தில் கேத்ரின் தெரசாவுக்கு மாறுபட்ட நாயகி வேடமாம். மஞ்சப்பை ராகவன் இயக்கும் இந்த படத்தில் அவரும் காட்டுவாசி பெண்ணாக நடித்திருப்பதாகவும் தெரிகிறது. என்றாலும் இப்போதைக்கு அதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.
மேலும், இதுவரை கேத்ரின் தெரசா நடித்த படங்களில் மெட்ராஸ் சூப்பர் ஹிட் படம் என்றபோதும், கணிதன் படத்தில்தான் அவரது நடிப்பை சில ஹீரோக்கள் மனதார பாராட்டுகிறார்களாம். குறிப்பாக, அதர்வாவுடன் இணைந்து அவர் நடனமாடிய, யப்பா ஷப்பா -என்ற பாடலில் அவர் ஆடிய நடனத்தை வெகுவாக பாராட்டி, என்னவொரு மூவ்மென்ட், என்னவொரு பாடிலாங்குவேஜ் என்று சொல்லி கேத்ரினை மெய்சிலிர்க்க வைத்து விட்டார்களாம்.