இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வெண்ணிலா கபடிக்குழுவில் இயக்குனரான சுசீந்திரன், அதையடுத்து தான் இயக்கிய சில படங்களுக்கு தானே டைட்டீல் வைத்தபோதும், சில படங்களுக்கு ஏற்கனவே வெளியான படங்களின் டைட்டீல்களை வைத்திருந்தார். அந்த வகையில், நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாயும்புலி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதன் பிறகும் தான் வைத்திருக்கும் சில கதைகளுக்கு பழைய படங்களின் டைட்டீல்களை அவர் யோசித்து வைத்துள்ளாராம்.
இதற்கு என்ன காரணம்? என்று சுசீந்திரன் கூறும்போது, கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்தை இயக்குவதற்கு கதை ரெடி பண்ணியபோது, சரியான டைட்டீலே கிடைக்கவில்லை. நான் யோசித்த டைட்டீல்கள் அந்த கதைக்கு பொருந்தவில்லை. அதனால்தான் ரஜினி நடித்த நான் மகான் அல்ல டைட்டீலை வைக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராஜபாட்டை, பாயும்புலி ஆகிய படங்களின் கதைகளுக்கும் அந்த டைட்டீல்கள் பொறுத்தமாக இருந்தது. அதனால்தான் வைத்தேன். மேலும் என்னைப்பொறுத்தவரை கதையைகூட எளிதில் ரெடி பண்ணி விடுவேன். ஆனால் டைட்டீல் ரெடி பண்ணுவதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதனால்தான் எனது கதைக்கு பொருத்தமாக இருக்கும்பட்சத்தில் ஏற்கனவே வெளியான டைட்டில்களை வைத்து விடுகிறேன் என்கிறார் சுசீந்திரன்.