ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆதித்யா சேனலில் "டாடி எனக்கொரு டவுட்டு" -என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டவுட் செந்தில். அதன்பிறகு சில காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பங்கேற்று வந்த அவர், உப்புக்கருவாடு உள்பட சில படங்களில் காமெடியனாக நடித்தார். இந்தநிலையில், தற்போது ஆதித்யா சேனலுக்காக, மாமா நீங்க எங்க இருக்கீங்க -என்றொரு காமெடி நிகழ்ச்சிக்கு ஸ்கிரிட்டு எழுதி நடித்துக்கொண்டிருக்கிறார் டவுட் செந்தில். விரைவில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.
இதுகுறித்து டவுட் செந்தில் மேலும் கூறுகையில், டாடி எனக்கொரு டவுட்டு நிகழ்ச்சிக்கு பிறகு வால் பசங்க -என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். லைவ் நிகழ்ச்சியில் பேசும் நேயர்களில் சிறப்பாக பேசுபவர்களைஅழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துவோம். அதில் சிறப்பாக பேசுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.
இதையடுத்து, தற்போது மாமா நீங்க எங்க இருக்கீங்க...- என்ற நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறேன். இதில் ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு கான்செப்ட் எடுத்துக்கொள்வேன். அது குடும்பங்களில் கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கும். அந்த பிரச்சினையை காமெடியாக சொல்லுவேன். அதற்குள்ளும் ஒரு கருத்து இருக்கும். இந்த நிகழ்ச்சியில் என்னுடன் இணைந்து ஒரு நடிகையும் நடிக்கிறார். குடும்பம் சம்பந்தப்பட்ட கான்சென்ட் என்பதால் இது பெரிய அளவில் பேசப்படும் நிகழ்ச்சியாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்று சொல்லும் டவுட் செந்தில், இப்போது 3 படங்களில் படம் முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் காமெடி வேடத்திலும் நடித்து வருகிறாராம்.