'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியத் திரையுலகில் சாதனை மேல் சாதனையாகப் படைத்துக் கொண்டிருக்கும் 'கபாலி' டீசர் இன்று மற்றுமொரு புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் சார்ந்த வீடியோக்களில் யு டியூபில் இதுவரை அதிக லைக்குகளைப் பெற்ற வீடியோவாக அனிருத் இசையமைத்து, தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் இருந்தது. இப்போதுவரை அது 4,11,794 லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்த லைக்குகளை தற்போது 'கபாலி' டீசர் முறியடித்துள்ளது. இதன் மூலம் மேலும் ஒரு புதிய சாதனையை கபாலி டீசர் நிகழ்த்தியிருக்கிறது.
இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற பெருமையைப் பெற்றுள்ள கபாலி டீசர் இதுவரை 1 கோடியே 89 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்துள்ளது. விரைவில் அது 2 கோடியைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'கபாலி' டீசரின் இந்த சாதனையை இப்போதைக்கு வேறு எந்த தமிழ்ப பட டீசரும் முறியடிக்க வாய்ப்பில்லை. அஜித் 'வேதாளம்' படத்திற்குப் பிறகு இன்னும் அடுத்த படத்தின் படப்பிடிப்பையே ஆரம்பிக்கவில்லை. விஜய் இப்போதுதான் அவருடைய அடுத்த படப் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார். அந்த டீசர் வருவதற்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும். அப்படியே வந்தாலும் 'கபாலி' டீசர் சாதனையை நெருங்கக் கூட முடியாது.
இதனிடையே, அடுத்த மாதம் இசை வெளியீடு நடைபெறும் போது 'கபாலி' டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அது என்னவெல்லாம் சாதனை படைக்கப் போகிறதோ..