ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மைனா, கும்கி படங்களில் வெற்றியடைந்த, பிரபு சாலாமன் கயல் படத்தில் படு தோல்வியை சந்தித்தார். கயல் படம் தயாரிப்பில் இருந்தபோது பிரபு சாலாமனின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் தனுஷ். கயல் தோல்வியடைந்தநிலையிலும், பிரபுசாலமனின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முழுக்க முழுக்க ரயிலியே நடக்கும் கதை என்பதால், வரிவிலக்குக்கு பாதகம் இல்லாமல் தமிழ்அகராதியில் தேடி 'தொடரி' என்று பெயர் வைத்தார்.
தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்களாகிவிட்டன. 75 சதவிகித காட்சிகள் க்ரீன்மேட் பின்னணியில் செட் போட்டு எடுக்கப்பட்டதால் சிஜி மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடையாமல் தாமதம் ஆனது. தற்போது தொடரி படத்தை விரைவில் வெளியிடுவதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறதாம்.
தொடரி படத்தின் இசை வெளியீடு வருகிற ஜூன் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது. தொடரி படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கபட இருப்பதாக சொல்லப்படுகிறது.