Advertisement

சிறப்புச்செய்திகள்

வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால்லுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் மலையாள ஜனதா கேரேஜ் பஸ்ட் லுக்

21 மே, 2016 - 17:15 IST
எழுத்தின் அளவு:
Janatha-Garage-another-first-look-released-of-Mohanlals-Birthday

இன்று(மே 21) பிறந்த நாள் காணும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். ஜூனியர் என்.டி.ஆர் நாயகனாக நடிக்கும் ஜனதா கேரேஜ் எனும் தெலுங்கு படத்தில் மோகன்லால் முக்கிய வேடமேற்று நடித்து வருகின்றார். நேற்று ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனதா கேரேஜ் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை தெலுங்கு டைட்டிலுடன் வெளியிட்ட படக்குழு இன்று மோகன்லாலை மையப்படுத்திய மற்றொரு போஸ்டரை மலையாள டைட்டிலுடன் வெளியிட்டுள்ளது.


ஜனதா கேரேஜ் படத்தில் மோகன்லால் டான்-ஆக நடிப்பதாகக் கூறப்பட்டது. இதனை மெய்பிக்கும் வண்ணம் மோகன்லால் அடியாட்களுடன் அதிரடியாய் நடந்து வருமாறு அப்போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஜனதா கேரேஜ் என்ற பெயரிலேயே தெலுங்கு,மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. மேலும் மோகன்லால் நடித்து வரும் மற்றுமொரு தெலுங்கு படமான மனமந்தா படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in