'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகத்தினர் அனைவராலும் 'லாலேட்டன்' என செல்லமாக அழைக்கப்படும் பெருமைக்குரியவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். 1978ஆம் வருடம் 'திரநோட்டம்' என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய மோகன்லால் இப்போது வெற்றிகரமாக 36வது ஆண்டில் அதே கம்பீரத்துடன் உலா வந்துகொண்டு இருக்கிறார். எந்த கதாபாத்திரமானாலும் அதில் தன்னை 100 சதவீதம் புகுத்திக்கொண்டு அந்த கேரக்டருக்கு உயிர்கொடுக்கும் வல்லமை அவருக்கு இருப்பதால் தான் அவரை 'கம்ப்ளீட் ஆக்டர்' என கேரள சினிமாவே கொண்டாடுகிறது.
அவர் வெற்றிப்படத்தில் நடிக்கிறாரா, இல்லை தோல்விப்படங்களாக கொடுக்கிறாரா என்கிற கவலையெல்லாம் ரசிகர்களுக்கு இல்லை. அவர் நடித்து படங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறதா, அது போதும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். அதுதான் மோகன்லாலின் பலம். மலையாளம் தவிர மற்ற மொழிகளிலும் தற்போது நடித்துவரும் மோகன்லாலுக்கு அனைத்து மொழிகளும் சிவப்புக்கம்பளமே விரிக்கப்படுகிறது. இன்று 56 வயதை தொட்டு பிறந்தநாள் காணும் லாலேட்டனுக்கு நமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வோம்..