பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழக சட்டசபை தேர்தலில் ஒரே கட்சி சார்பாக நின்ற கருணாஸ் வெற்றிபெற்று ஆச்சர்யப்படுத்த, சரத்குமாரோ தோல்வியை தழுவி அதிர்ச்சியை அளித்தார்.. கேரள சட்டசபை தேர்தலிலும் கூட இதேபோல போட்டியிட்ட நடிகர்களுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைத்துள்ளன. கேரள சட்டசபை தேர்தலில் மலையாள நடிகர்கள் சிலர் களம் இறங்கியதையும் பிரச்சாரத்தின்போது அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதையும் அவ்வப்போது நாம் சொல்லி வந்துள்ளோம். இந்த தேர்தலில் போட்டியிட்ட நான்கு நடிகர்களில் இரண்டு பேருக்கு வெற்றியும் இரண்டு பேருக்கு தோல்வியும் கிடைத்துள்ளன.
திருவனந்தபுரம் மாவட்டம் பத்தனாபுரம் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றுமுறை வெற்றிபெற்ற கணேஷ்குமாருக்கு நான்காவது முறையாகவும் (74429 வாக்குகள்) வெற்றி கிடைத்துள்ளது.. அவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகர் ஜெகதீஷ் (49,867 வாக்குகள்) மற்றும் வில்லன் நடிகர் பீமன்ரகு இருவரும் தோல்வியை தழுவியுள்ளனர். அதேபோல முதன்முறையாக கொல்லம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட நடிகர் முகேஷ் தனக்கு எதிராக நின்ற சூரஜ் ரவி என்பவரை விட 18000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிக்கனியை பறித்துள்ளார்.