மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நாளை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் பிறந்தநாள்.. அவரது ரசிகர்கள் மோகன்லாலுக்கு பிறந்தநாள் பரிசு தருகிறார்களோ இல்லையோ, தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மோகன்லால் ட்ரீட் தரப்போகிறார் என்பது மட்டும் உறுதி.. ஆனால் அதுகூட மோகன்லாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இரண்டு படங்களின் படக்குழுவினர் செய்துள்ள ஏற்பாடு தான். அது மோகன்லாலுக்கும் பரிசாக, அவரது ரசிகர்களுக்கும் பரிசாக அமையப்போகிறது.
தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் படங்கள் இரண்டு. ஒன்று மலையாளத்தில் உருவாகியுள்ள 'புலி முருகன்'.. இன்னொன்று தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்துள்ள 'ஜனதா கேரேஜ்'.. இந்த இரண்டு படங்களின் டீசரையும் நாளை மோகன்லாலின் பிறந்தநாள் பரிசாக வெளியிடுவதற்கு இரண்டு படங்களின் இயக்குனர்களும் முடிவுசெய்து பம்பரமாக சுழன்று உழைத்து வருகின்றனராம். ஒரு டீசருக்கே ஊர் தாங்காது.. இதில் இரண்டு டீசர் என்றால் கேட்கவும் வேண்டுமோ..?