Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2 தமிழ்ப்படங்கள் உடன் அரை டஜன் படங்கள்

20 மே, 2016 - 17:19 IST
எழுத்தின் அளவு:
Half-dozen-movies-releasing-today-including-2-movies

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதன் தாக்கம் இருக்கும் என்பதால் மே 20 அன்று படங்களை வெளியிட தயக்கம் நிலவியது. மே 20 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இது நம்ம ஆளு உட்பட பல படங்களில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஏற்கனவே வெளியான 24 படம் பல தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டதால், புதிய படங்களுக்காக தியேட்டர்கள் காத்திருந்தன.


இதை பயன்படுத்திக்கொள்ளும்வகையில், 'மருது' 'கத சொல்லப் போறோம்' ஆகிய 2 தமிழ்ப் படங்கள் உட்பட 6 க்கும் மேற்பட்ட படங்கள் களமிறங்கியிருக்கின்றன. குட்டிப்புலி, கொம்பன் படங்களுக்குப் பிறகு முத்தையா இயக்கியிருக்கும் 3 ஆவது படம் 'மருது'. விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மருது படம் இன்றும் தமிழகத்தில் 150க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மருது படத்துடன் தமிழில் 'கத சொல்லப் போறோம்' என்ற சிறிய பட்ஜெட்டில் தயாரான குழந்தைகளுக்கான படமொன்றும் இன்று ரிலீஸாகிறது.


தெலுங்கு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் மகேஷ்பாபுவின் 'பிரம்மோற்சவம்' படமும் இன்று ரிலீஸாகி இருக்கிறது. மகேஷ்பாபு, சமந்தா, காஜல், பிரணிதா, சத்யராஜ், ரேவதி, சரண்யா பொன்வண்ணன் என தமிழ் நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஆரம்பிக்கப்பட்டபோது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகவிருப்பதாக அறிவித்தார்கள். ஆனால், என்ன காரணத்தினாலோ 'பிரம்மோற்சவம்' படம் இப்போது தெலுங்கில் மட்டுமே வெளியாகிறது.


துல்கர் சல்மான் நடித்த 'கம்மாட்டிபாடம்' என்ற மலையாள படமும் இன்று வெளியாகிறது. துல்கர் சல்மான் கேரியரில் முக்கிய படமாக எதிர்பார்க்கப்பட்ட படம் இது.


ஆங்கிலப் பட ரசிகர்களின் ஃபேவரைட் மூவியான 'எக்ஸ்மென் : அபோகலிப்ஸ்' ஆகிய படங்களும் இன்று ரிலீஸாகிறது.


அதோடு 'யு டர்ன்' என்ற கன்னட படமும் இன்று வெளியாகிறது. 'லூஸியா' கன்னடப் படத்தின் மூலம் தென்னிந்தியாவில் முக்கிய இயக்குனராக பார்க்கப்படும் பவன்குமாரின் படம் இது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in