திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க உள்ள படம் ஜூன் மாதம் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு இயக்கம் சிவா, இசையமைப்பாளர் அனிருத், நாயகன் அஜித் ஆகியோர் மட்டுமே படத்திற்காக உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். யார் ஹீரோயின்?, யார் காமெடியன்? என இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லை.
இதனிடையே கடந்த சில நாட்களாக இந்தப் படத்தில் சந்தானம் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், சிவகார்த்திகேயனை மிஞ்சும் அளவிற்கு வியாபாரம் உள்ள ஹீரோவாக மாற வேண்டும் என்று சபதம் எடுத்துள்ள சந்தானம், அஜித் படத்தில் நடிக்க மாட்டார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தானம் இந்த அளவிற்கு வர காரணமாக இருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை இயக்கிய ராம்பாலா இயக்கியுள்ள 'தில்லுக்கு துட்டு' படம் சந்தானம் இதற்கு முன் நாயகனாக நடித்த படங்களைக் காட்டிலும் நன்றாக ஓடும் என்று ஒரு தகவல் பரவியுள்ளதாம். இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறார்களாம்.
சின்னத் திரையில் சந்தானத்திற்கு எப்படி ஒரு வாழ்க்கை கிடைத்ததோ அதே போல 'தில்லுக்கு துட்டு' படம் மூலம் நாயகனாக ஒரு புது வாழ்க்கை கிடைக்கும் என்கிறார்கள்.