தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்று(மே 20) பிறந்த நாள் காணும் ஜூனியர் என்.டி.ஆர் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார். அவரது ரசிகர்களும், திரை பிரபலங்களும் டுவிட்டர், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் ஜூனியர் என்.டி.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளில் வெளிவந்த ஜனதா கேரேஜ் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரையும் அல்லு அர்ஜூன் பாராட்டியுள்ளார்.
இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகும் ஜனதா கேரேஜ் படத்தில் மெக்கானிக், ஐ.ஐ.டி மாணவன் என இரு வேறு வேடங்களில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கின்றார். இதனால் இருவித போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒன்றில் பைக் ஓட்டியபடி மாஸாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் அடுத்த போஸ்டரில் நவநாகரீக உடை அணிந்து கூலாக காணப்படுகின்றார். இவ்விரு போஸ்டர்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன