இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கோலிவுட்டில் தொடர்ச்சியாக நான்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வேகமாக முன்னணி நடிகரானவர் விஜயசேதுபதி. அதையடுத்து சில படங்கள் அவரை சறுக்கிவிட்டபோதும் நானும் ரவுடிதான், சேதுபதி உள்ளிட்ட சில படங்களின் வெற்றி தற்போது பிசியான நடிகராகியிருக்கிறார் விஜயசேதுபதி. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இளவட்ட டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். அதோடு அடுத்து எந்தமாதிரியான கதைகளில் நடிக்கலாம் என் பதையும் தனது அபிமானிகளுடன் அமர்ந்து ஆலோசனையும் நடத்துகிறார்.
மேலும், அவரை வைத்து ஹிட் படங்களை கொடுத்த சில டைரக்டர்கள் அந்த படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று விஜயசேதுபதியை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். முதல் படமாக கோகுல் இயக்கத்தில் தான் நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் 2ஆம் பாகத்தில் விஜயசேதுபதி நடிப்பார் என்று கூறப்படுகிறது. சுமார் மூஞ்சிகுமார் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்ததால், அதன் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்த ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறாராம் விஜயசேதுபதி.