‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
சௌரியா, அட்டாக் போன்ற மஞ்சு மனோஜின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவினாலும் மனோஜின் நடிப்பிற்கு பாராட்டுகள் கிடைத்தன. இருப்பினும் வசூலில் வெற்றி காணாத மஞ்சு மனோஜ் அடுத்த தான் நடிக்கும் படங்களுக்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். தற்போது மூன்று படங்களை மனோஜ் தேர்வு செய்துள்ளார். இன்று(மே 20) பிறந்த நாள் கொண்டாடும் மஞ்சு மனோஜ் அப்படங்களை இன்றே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அறிமுக இயக்குனர் சாகர் பிரசன்னா இயக்கவிருக்கும் சீதா மஹாலக்ஷ்மி படத்தில் மஞ்சு மனோஜ் நடிக்கவிருக்கின்றார். அப்படத்திற்கு பின்னர் தயாரிப்பாளர் வருண் தயாரிப்பில் இயக்குனர் சத்யா.கே இயக்கும் படத்தில் மனோஜ் நடிக்கவுள்ளார். இவ்விரு படங்களை முடித்த பின்னர் அறிமுக இயக்குனர் அஜெய் ஆன்ட்ரூ இயக்கும் படத்தில் மனோஜ் நடிக்கின்றார். இப்படத்திற்கு பிரபல கதாசிரியர் கோபிமோகன் திரைக்கதை எழுதுகின்றார். லக்ஷ்மிகாந்த் மற்றும் எஸ்.என்.ரெட்டி இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.