ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர் இன்று(மே 20) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். திரை உலக பிரபலங்களும் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களும் நண்பர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஜூனியர் என்.டி.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜூனியர் என்.டி.ஆர் தற்போது நடித்து வரும் ஜனதா கேரேஜ் படக்குழு அப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த படம் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பும் இன்று வெளிவந்துள்ளது. பிரபல வசனகர்தா மற்றும் கதையாசிரியர் வம்சி இயக்குனராக அறிமுகமாகவிருக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்படம் குறித்த அறிவிப்பு ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளிவந்துள்ளது. யெவடு, கிக் போன்ற படங்களுக்கு திரைக்கதை அமைத்து பிரபலமான வம்சி இயக்கவிருக்கும் அதிரடி ஆக்ஷன் படத்தை ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க, என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் கல்யாண் ராம் தயாரிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் பூஜை நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.