ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி. அந்த படத்தில் பாலே டான்சராக நடித்த வரலட்சுமி, படு கவர்ச்சியாக நடித்து இளைஞர்களை கிறங்கடித்தார். அதனால் அதன்பிறகு ஒரு மிகப்பெரிய கவர்ச்சி ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வரலட்சுமியை, அதிகமான படங்களில் பார்க்க முடியவில்லை. அதோடு அவர் இரண்டாவதாக நடித்த மதகஜராஜா படமும் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து பாலாவின் தாரைத்தப்பட்டை படத்தில் கரகாட்ட பெண்ணாக அதிரடியான வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம் வரலட்சுமியின் திறமைக்கு ஒரு நற்சான்றாகவும் அமைந்தது. விளைவு, தற்போது தமிழில் அர்ஜூன் நடிக்கும் நிபுணன் படத்தில் நடிக்கும் வரலட்சுமி, மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் கசபா என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு ஹோம்லியான வேடத்தில் நடிக்கும் அவருக்கு ஒரு மிகப்பெரிய குடும்ப பிரச்சினையை எதிர் கொள்ளும் சவாலான வேடமாம். அதனால் படம் முழுக்க புடவை கெட்டப்பில் நடிக்கிறாராம். தாரைத்தப்பட்டையில் வரலட்சுமியின் நடிப்பைப்பார்த்து விட்டுத் தான் இந்த வேடத்துக்கு அவரை செலக்ட் பண்ணினாராம் அப்பட டைரக்டரான நிதின் ரெஞ்சி பணிக்கர்.