ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில், அவன் -என்ற படத்தில் நடிகராக அறிமுகமான பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ், தமிழில், தனுஷின் மாரி படத்தில் போலீசாக நடித்திருந்தார். அதோடு வில்லத்தனமான போலீஸ் வேடம் என்பதால் அவரது நடிப்பு பேசும்படியாக இருந்தது. அதைப்பார்த்து மேலும் சில படங்களில் வில்லனாக நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடிச்சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் படைவீரன் என்ற படத்தில் கதாநாயகனாகி விட்டார்.
மணிரத்னத்தின் உதவியாளர் இயக்கும் இந்த படத்தில் டைரக்டர் பாரதிராஜா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆயுத எழுத்து, ரெட்டைச்சுழி படங்களுக்குப்பிறகு விஷால் நடித்த பாண்டிநாடு படத்தில் நடித்த பாரதிராஜா, தற்போது ஓம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து விஜய் யேசுதாஸின் படைவீரன் படத்திலும் நடிக்கிறாராம். அவர் எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பதை தற்போதைக்கு சஸ்பென்சாக வைத்துள்ளனர்.