ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகள் நிகாரிகா நாயகியாக அறிமுகமாகும் ஒக்க மனசு பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் தவிர பிற மெகா குடும்ப நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அவரது மகன் அல்லு அர்ஜூன், நாக பாபு வருண் தேஜ், சாய் தரண் தேஜ் மற்றும் ஒக்க மனசு படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இயக்குனர் ராமராஜ் இயக்கியுள்ள இப்படத்தை டிவி9 நிறுவனம் தயாரிப்பாளார் ஸ்ரீதருடன் இணைந்து தயாரித்துள்ளது.
பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராம் சரண், அல்லு அர்ஜூன் நிகாரிகா மற்றும் படக்குழவினருக்கு இப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் அல்லு அர்ஜூனுக்கும் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்தும் அல்லு அர்ஜூன் நிகழ்ச்சியில் பேசினார்.