தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வினாயகனை தெரியும் தானே..? பின்னே 'திமிரு' படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக ஒரு காலை விந்தியபடியே 'அக்கா அக்கா' என அழைத்தபடி நடித்து அனைவரையும் கவர்ந்து விநாயகனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியமா..? இங்கு தமிழில் தான் அவருக்கு படம் இலையே தவிர, மலையாளத்தில் சீரான இடைவெளியில் படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் வினாயகன். குறிப்பாக 'டான்' கதைகள் என்றால் விநாயகனுக்கு என ஒரு கேரக்டரை ஒதுக்கி கர்ச்சீப் போட்டு வைக்கும் அளவுக்கு அவரது தேவை அங்கே அதிகம்.
இதற்கு முன் சோட்டா மும்பை, சாகர் அலைஸ் ஜாக்கி, சோட்டா மும்பை, பெஸ்ட் ஆக்டர், மசாலா ரிபப்ளிக் என பல படங்களில் இவரை தாதாகவாக, தாத்தாவின் வலதுகையாகத்தான் பார்க்க முடிந்தது.. தற்போது துல்கர் சல்மான் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 'கம்மட்டி பாடம்' படத்தில் அண்டர்கிரவுண்ட் டானாக நடிக்கும் துல்கர் சல்மானுக்கு வலதுகையாக, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் வினாயகன். இதில் விஷேசம் என்னவென்றால் இதற்கு முன் துல்கர் நடிப்பில் வெளியான 'கலி' படத்தில் இடைவேளைக்குப்பின் துல்கரை தனது கட்டுப்பாட்டில் மிரட்டி வைத்திருக்கும் லோக்கல் குண்டாவாக மிரட்டிய வினாயகன், 'கம்மட்டி பாடம்' படத்தில் அதற்கு பிராயசித்தம் செய்துவிட்டார் போலும்.