ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவை பொறுத்தவரை முன்னணியில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் தங்களது 100வது படம் என்பது மிகப்பெரிய லட்சிய கனவாகவே இருக்கும். மற்ற படங்களின் வெற்றி தோல்வியை விட, இந்தப்படங்களின் வெற்றியும் தோல்வியும் தான் காலத்துக்கும் ரசிகர்களிடம் பேசப்படும். மலையாள சினிமாவின் எவர்கிரீன் ஸ்டாரான பிருத்விராஜின் கனவும் அவரது 100வது படம் குறித்து தான் இருக்கிறது.. ஆம், 25 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து இன்று இரு துருவங்களாக கோலோச்சி வரும் விஜய், அஜித் ஆகியோர் கூட இன்னும் 60 படங்களை தொடாத நிலையில், நடிக்க வந்த 14 வருடங்களில் இந்த சாதனையை நிகழ்த்த உள்ளார் பிருத்விராஜ்.
அதேபோல இதற்கு முன்னர் தங்களது 100வது படத்தின் கமர்ஷியல் வெற்றிக்காக மெனெக்கெட்ட மற்ற நடிகர்களைப்போல அல்லாமல் தனது 100வது படம் வித்தியாசமான படமாக இருக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டார் பிருத்விராஜ்.. ஆனால் அந்தப்படம் குறித்து இனி புதிதாக அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.. ஆர்.எஸ்.விமல் டைரக்சனில் பிருத்விராஜ் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 'கர்ணன்' படம் தான் அது.. ஆம் புராணப்படத்தை தான் தனது 100வது படமாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் பிருத்விராஜ்.
அதனால் தான் தற்போது அவர் ஒப்புக்கொண்ட மற்ற படங்கள் எல்லாம் முன்னதாகவே ரிலீஸ் ஆகட்டும் என்று 'கர்ணன்' படத்தின் தயாரிப்பு பணிகளை மட்டும் தாமதப்படுத்தி வருகிறார்கள்.. தமிழ்சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக கோலோச்சிய காலத்தில் 'ஸ்ரீ ராகவேந்திரா' என்கிற புராணப்படத்தை தனது 100வது படமாக வெளியிடும் தைரியம் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இருந்தது போல, அவர் வழியில் துணிச்சலான முடிவையே எடுத்து தான் உண்மையிலேயே வித்தியாசமான நடிகர்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் பிருத்விராஜ்.