பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தற்போதைய மலையாள சினிமாவின் இளைஞர்களின் நாயகன்களில் துல்கர் சல்மான் முக்கியமானவர். இவர் சினிமாவுக்கு நடிக்க வந்து சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகிறது.. கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்துள்ளார் துல்கர்.. ஆனாலும் இதுநாள் வரை அவரது படங்கள் எதுவும் 'A' சான்றிதழ் பெற்றதில்லை.. அந்தவகையில் அவருக்கு இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருமே ஆடியன்ஸ் ஆக இருந்து வருகின்றனர்.. ஆனால் அடுத்ததாக துல்கர் சல்மான் நடித்து, விரைவில் வெளியாகவுள்ள 'கம்மட்டி பாடம்' என்கிற படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது படக்குழுவினருடன் சேர்த்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அங்கே ஒன்றும் நம்ம ஊரைப்போல வரிவிலக்கு பிரச்சனை இல்லை என்றாலும் கூட, துல்கர் சல்மான் படம் ஒன்று முதன்முதலாக 'A' சான்றிதழ் வாங்கியிருப்பதுதான் அதிர்ச்சி தந்திருக்கிறது... நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல துல்கர் சல்மான் நடிக்கும் முதல் முழுநீள ஆக்சன் படம் இது என்பதை இந்த சான்றிதழ் உறுதிப்படுத்தியுள்ளது.. கொச்சி அன்டர்வேல்டு தாதாக்களின் சண்டையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படம் சுமார் 2.45 மணி நேரம் ஓடும் வகையில் எடிட் செய்யப்பட்டுத்தான் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம். ஆனால பல காட்சிகளில் வன்முறை தூக்கலாக இருந்ததால் கிட்டத்தட்ட 15 நிமிட காட்சிகளை வெட்டச்சொல்லி, அதன்பின்னரே இந்த 'A' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆக, ஆக்சன் பிரியர்களுக்கு நல்ல தீனி இருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.