'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் சுகுமாரின் திரைக்கதையில் உருவான குமாரி 21F படத்தில் துணிலசான நாயகி வேடம் ஏற்று நடித்த ஹீப்பா பட்டேலுக்கு குமாரி 21F திரைப்படம் பாராட்டுக்களைப் பெற்று தந்தது. அப்படத்திற்கு பின்னர் இதோ ராகம் அதோ ராகம் படத்தில் ஹீப்பா நடித்திருந்தார். சுமாரான வசூலைப் பெற்ற அப்படத்திற்கு பின்னர் அறிமுக இயக்குனர் பழனி இயக்கத்தில் ஏஞ்சல் எனும் படத்தில் நாயகியாக நடிக்க ஹீப்பா ஒப்பந்தமாகியுள்ளாராம். பாகுபலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய பழனி ஏஞ்சல் படத்தின் வாயிலாக இயக்குனராக மாறுகின்றார். நாயகியை மையப்படுத்திய இப்படத்தில் பிரபல நடிகர் கிருஷ்ணா ரெட்டியின் மகன் நாக அன்வீஷ் நாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.