இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தைச் சேர்ந்த நிகாரிகா நாயகியாக நடிக்கும் ஒக்க மனசு திரைப்படம் திரைக்கு தயாராகி வருகின்றது. இயக்குனர் ராமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஒக்க மனசு” படத்தில் நாயகனாக நாக சௌரியா நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று(மே 18) மாலை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மெகா குடும்பத்தைச் சேர்ந்த ராம் சரண், அல்லு அர்ஜூன், வருண் தேஜ் மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளனர். சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நகேந்திர பாபுவின் மகளான நிகாரிகா மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. நிகாரிகாவின் சகோதரர் வருண் தேஜூம் டோலிவுடின் பிரபல நடிகராவார்.