தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பட்டாஸ் படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்த கல்யாண் ராம் தற்போது பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் என்பது அறிந்ததே. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாஸ் மசாலா படத்தை கல்யாண் ராம் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்து நாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் தயாரிப்பு செலவு மட்டும் ரூ 30 கோடி என படக்குழு திட்டமிட்டுள்ளது. கல்யாண் ராம் நடித்த படங்களில் அதிக செலவுடன் தயாராகும் படம் இதுவாகும். கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெற்றது. மே இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. முதல் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஸ்பெயின் செல்லவுள்ளது. நடிகை அதிதி ஆர்யா இப்படத்தில் கல்யாண் ராமிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்