பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
ரஜினிகாந்த் 1994 -ல் நடித்த படம் வீரா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அந்த படத்தில் மீனா-ரோஜா நாயகிகளாக நடித்திருந்தனர். பஞ்சு அருணாசலம் வசனம் எழுதிய அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அந்த வீரா படத்தின் டைட்டீலில் இப்போது கிருஷ்ணா நடிப்பில் ஒரு படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அவருடன் கருணாகரனும் முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா மேனன் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் ஐஸ்வர்யாமேனன் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்று அவரைக்கேட்டால்? நான் கதாநாயகியாக நடிக்கிறேன். இப்போதைக்கு அதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும் என்கிறார். காரணம் கேட்டால், வீரா படம் குறித்து எந்தவொரு தகவலையும் மீடியாக்களிடம் சொல்லக்கூடாது என்று ஐஸ்வர்யா மேனனுக்கு அப்பட டைரக்டரான ராஜாராமன் கண்டிசன் போட்டுள்ளார். அதனால் நான் எந்தமாதிரி வேடத்தில் நடிக்கிறேன் என்பதை இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது என்கிறார் அவர்.
மேலும், ரஜினியின் வீரா படத்தின் கதைக்கும் இந்த படத்தின் கதைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என்று கேட்டால், டைட்டீல் மட்டும்தான் சம்பந்தம். மற்றபடி இது வேறுமாதிரியான கதை. அதோடு அந்த படத்தில் மீனா-ரோஜா என இரண்டு ஹீரோயினிகள் நடித்தனர். ஆனால் இந்த படத்தில் நான் மட்டும் தான் கதாநாயகி. ஆக, கதை வேறு என்பதை இதில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.