இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சாணக்யா படத்தை அடுத்து ராஜீவ்குமார் இயக்கத்தில் மீண்டும் கமல் நடிக்கும் படம் சபாஷ் நாயுடு. தசாவதாரம் படத்தில் நடித்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தாலும் அதையும் தாண்டி கமலின் பர்பாமென்ஸ் இருக்குமாம். அதோடு, தமிழ், தெலுங்கில் சபாஷ்நாயுடு என்ற பெயரில் உருவாகும் இப்படம் இந்தியில் சபாஷ் குண்டு என்ற பெயரில் உருவாகிறது. இப்படத்தில் கமலுடன் பிரேமானந்தம், ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
மேலும், இப்படத்தின் பூஜை நடிகர் சங்க வளாகத்தில் நடந்த நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பை மே 16-ந்தேதி அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதே நாளில் தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப் பட்டதை அடுத்து படப்பிடிப்பை சில நாட்களுக்கு தள்ளி வைத்தார் கமல். இந்நிலையில், இன்று கமல் சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்வதாக கூறப்படும் நிலையில், இந்த வாரம் இறுதியில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு சண்டை காட்சியுடன் இனிதே தொடங்குகிறதாம்.