ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வாரத்துக்கு குறைந்தபட்சம் மூன்று தமிழ்ப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. என்றாலும் அவற்றில் வெற்றியடையும் படங்களை விரல்விட்டுத்தான் எண்ண வேண்டியதாக இருக்கிறது. ஓடாத படத்தை ஓட வைக்க, திருட்டு விசிடி வந்துவிட்டதாக கமிஷ்னர்ஆபிசில் புகார் கொடுத்து ஓசி விளம்பரம் தேடிடுகிறார்கள். அப்படியும் படங்களுக்கு வசூல் இல்லை.
சமீபத்தில் வெளியான படங்களில் தெறி படம் தவிர மற்ற எந்தவொரு படமும் வசூலில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்நிலையில், வால்ட் டிஸ்னி நிறுவனமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு 'தி ஜங்கிள் புக்' படம் இந்தியாவில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறையை குறிவைத்து, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியானது த ஜங்கிள் புக். இப்படம் சென்னை உட்பட இந்தியாவின் பல தியேட்டர்களில் இன்னும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
'தி ஜங்கிள் புக்' ரிலீஸாகி 40 நாட்களை நெருங்கிவிட்டநிலையில், 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. கோடைமுறை இன்னும் இரண்டு வார காலம் பாக்கி இருப்பதால், வரும் நாட்களில் இப்படத்தின் வசூலில் மேலும் முன்னேற்றம் இருக்கும் என்கிறார்கள். ஆக மொத்தம் ஒட்டுமொத்தமாக 300 கோடிகளை இந்தியாவில் மட்டுமே தி ஜங்கிள் புக் படம் வசூல் செய்ய வாய்ப்பிருக்கிறது.