கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
நடிகைகளை பொறுத்தவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது சேலை கட்ட விரும்பாமல் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வருவதை விரும்பினாலும், பாரின் பெண்ணான எமிஜாக்சன் கூட படத்தின் கேரக்டருக்கு தேவைப்பட்டால் சேலை கட்டித்தான் நடித்தாக வேண்டும். ஆனால் மலையாள சினிமாவில் ஒரே ஒரு நடிகை மட்டும் தான் நடிக்கும் படங்களில் ஒரே மாதிரியான கெட்டப்பிலேயே தைரியமாக வலம் வருவதோடு ரசிகர்களிடம் கைதட்டலும் வாங்குகிறார். அவர்தான் நடிகை அபர்ணா கோபிநாத். மலையாள சினிமாவின் வித்தியாசமான ஹீரோயின் என அபர்ணா கோபிநாத்தை சொன்னால், அதற்கு நூறு சதவீதம் அவர் பொருத்தமானவர்தான்.
இவரை பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் தனது கெட்டப்பையும் மாற்றமாட்டார், கேரக்டரையும் மாற்றமாட்டார். காரணம் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் தனது கெட்டப்பை பற்றி கவலைப்படாமல் பாப்கட்டிங் தலையுடன் ஒரு ஆண் போலவே மிடுக்குடன் நடித்திருப்பார். துல்கருடன் நடித்த ஏபிசிடி, சார்லி, ஆசிப் அலியுடன் பைசைக்கிள் தீவ்ஸ், மம்முட்டியுடன் நடித்த முன்னறிவிப்பு அசிஸ்டன்ட் கமிஷனர் தாரா என்கிற கம்பீரமான கதாபாத்திரத்தில் நடித்த ஒண்ணாம் லோக மஹாயுத்தம் என அனைத்து படங்களிலும் மாடர்ன் ட்ரெஸ் தான் அணிந்து நடித்தாரே தவிர ஒரு படத்தில் கூட சேலை அணிந்து நடிக்கவில்லை என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.