ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கபாலி' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. ரஜினிகாந்தை வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் நடிக்க வைத்திருப்பார் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. படத்தின் டீசருக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரவேற்பு இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. அதற்கேற்ற விதத்தில் இந்தப் படத்தை தமிழ்நாட்டில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டுள்ளதாக படக்குழுவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 1000 தியேட்டர்கள் இருக்கின்றன. பொதுவாக ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் குறைந்தபட்சம் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில்தான் வெளியாகும். மற்ற மாநிலங்கள், உலக அளவில் என 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் மட்டுமே அந்தப் படங்கள் வெளியாகும்.
ஆனால், 'கபாலி' படத்தைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அதோடு ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா என தென்னிந்தியாவில் மட்டுமே 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
உலக அளவில் மேலும் 1000 தியேட்டர்கள் என்று வைத்துக் கொண்டாலும் 3000 தியேட்டர்களுக்கும் மேல் படம் வெளியாகம் என்று இப்போதுவரை ஒரு கணக்கு உள்ளது. படம் வெளியான சில நாட்களுக்குள்ளேயே 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி, 'பாகுபலி' பட வசூலுடன் போட்டி போடும் அளவிற்கு 'கபாலி' அமையும் என்று 'பாகுபலி'யைக் கொடுத்த தெலுங்கு தேசத்திலேயே பேச்சு எழுந்துள்ளதாம்.