பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள பிரம்மோற்சவம் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாக மகேஷ் பாபு உள்ளிட்ட படக்குழுவினர் வானொலி நிலையங்கள் மற்றும் தொலைகாட்சி நிறுவனங்களில் முகாமிட்டுள்ளனர். இது போன்றதொரு புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேஷ் பாபுவிடம் டோலிவுட் நடிகர்களில் யார் சிறப்பாக நடனமாடுகின்றார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு மகேஷ் பாபு ஜூனியர் என்.டி.ஆரின் நடனம் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாக பதில் கூறியுள்ளார். டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஜூனியர் என்.டி.ஆரின் நடனத்தைப் புகழ்ந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.