தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவை பொறுத்தவரை வயதாக வயதாக அது இயக்குனரோ அல்லது கதாசிரியரோ பல படைப்பாளிகளுக்கு கற்பனை திறன் குறைந்துவிடுவது இயல்பு தான். அல்லது மாறிவரும் காலத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப கதை பண்ண தெரியாமல் சில 'ஹிட்'டுகளுடனேயே காணாமல் போய்விடுகிறார்கள்.. ஆனால் உடலுக்கு வயதானாலும் மனதுக்கு வயதாகாமல் பார்த்துக்கொள்ளும் சில கதாசிரியர்கள் இந்த பீல்டில் இருக்கவே செய்கிறார்கள். மலையாள கதாசிரியரும் குணச்சித்திர நடிகருமான பி.பாலச்சந்திரனும் அந்த 'சிலர்' பட்டியலில் ஒருவர் தான்.. இல்லையென்றால் 30 வயதான துல்கர் சல்மான் படத்திற்கு 65 வயதான இவர் கதை எழுதுவது என்பது சாதாரண விஷயமா..?
ஆம் துல்கர் சல்மான் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 'கம்மட்டி பாடம்' படத்தின் கதை எழுதியிருப்பவர் இந்த பாலச்சந்திரன் தான். 'அன்னயும் ரசூலும்' புகழ் ராஜீவ் ரவி இயக்கியுள்ள இந்தப்படம் கொச்சி அண்டர்கிரவுண்ட் பின்னணியில் தயாராகியுள்ளது. அனேகமாக துல்கர் நடிக்கும் முதல் முழுநீள ஆக்சன் படமாக இது இருக்கும் என்பது ட்ரெய்லர் காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது.. கேரக்டருக்காக எப்படி வேண்டுமானாலும் தன்னை மாற்றிக்கொள்ளும் துல்கர் சல்மான் இந்தக்கதைக்கு பிளஸ் பாயின்ட் என்கிறார் இந்த கதையை எழுதி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பாலச்சந்திரன