ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஜாகுவார் எனும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்குகின்றார். மகேஷ் பாபு நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கவிருக்கும் “ஜன கண மன” படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்ட பூரி ஜெகன்நாத், ஜாகுவார் படத்திற்கு பின்னர் இயக்கவிருக்கும் படத்தில் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படம் ஒன்றை பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளதாகவும், ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளான மே 20ல் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஜூனியர் என்.டி.ஆர் தற்போது இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். இவ்விரு படங்களை முடித்த பின்னர் பூரி ஜெகன்நாத் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பார் என கூறப்படுகின்றது.