ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னாள் மத்திய அமைச்சரும் தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகருமான கிருஷ்ணம் ராஜூ சுவாச கோளாறு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணம் ராஜூ உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்தில் இறுதியாக நடித்த கிருஷ்ணம் ராஜூ ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்த மூத்த நடிகராவார்.
லோக் சபா எம்.பியாக இரு முறை தேர்வு செய்யப்பட்ட கிருஷ்ணம் ராஜூ மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். நேற்று(மே 16) பிரபல நடிகர் பிரபாஸ் மருத்துவமனைக்குச் சென்று கிருஷ்ணம் ராஜூவைச் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். தற்போது மருத்துவர்களின் கண்கானிப்பில் இருக்கும் கிருஷ்ணம் ராஜூ உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் அவர் நலமுடன் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.