ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான புதிய அணி பொறுப்பிற்கு வந்ததும் பல பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அவற்றின் ஒரு பகுதியாக சங்கத்திற்கென்று தனி இணையத்தளம் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
நமது சங்கத்திற்கென்று தனி இணையதளத்தை வடிவமைத்துள்ளோம். இதில் நமது சங்கத்தின் வரலாறு, நம்முடைய முந்தைய தலைமுறை ஜாம்பாவான்கள் பற்றிய தகவல்கள், சங்க நிர்வாகிகள் பற்றிய விபரங்கள், சங்க நடவடிக்கைகள், சங்கம் நடத்தும் பயிற்சி பட்டறைகள், படங்கள் திரையிடல் பற்றிய விபரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படும்,
ஒளிப்பதிவு துறையில் ஏற்படும் மாற்றங்கள், புதிய தகவல்கள் போன்றவையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.