ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 24. சமந்தா, நித்யாமேனன் யாகிகளாக நடித்துள்ள இந்த படத்தில் 3 வேடங்களில் நடித்துள்ளார் சூர்யா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான இப்படம். 200 கோடி வசூலிக்கும் என்று அந்த படத்தை வெளியிட்ட ஞானவேல்ராஜா எதிர்பார்த்தார். ஆனால் 100 கோடி பட்டியலில்தான் 24 படம் இணைந்திருக்கிறது. அதே சமயம், இப்படம் அமெரிக்காவில் அதிகப்படியான வசூலை ஈட்டியுள்ளதாம்.
அதாவது, இதுவரை அமெரிக்காவில் 1.32 மில்லியன் டாலரை 24 படம் வசூலித்துள்ளதாம். இது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தை விட அதிகமாம். ஐ படத்தின் மொத்த அமெரிக்க வசூல் தொகை 1.24 மில்லியன்தானாம். அதேசமயம், இந்த 1.32 மில்லியன் டாலர் என்பது ரஜினி படங்களின் அமெரிக்க வசூலைவிட குறைவுதானாம். என்றாலும், ரஜினிக்கு அடுத்த இடத்தை அமெரிக்காவில் பிடித்திருக்கிறார் 24 சூர்யா. அந்த வகையில், அமெரிக்காவின் பிளாக் பஸ்டர் லிஸ்டில் இணைந்து விட்டார் சூர்யா.