ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் சேர்த்துள்ள ஜூனியர் என்.டி.ஆர்., தற்போது கேரள ரசிகர்களின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நித்யா மேனன், உன்னி முகுந்தன் என மலையாள நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இதனால் இப்படம் கேரளாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்படும் என கூறப்படுகின்றது.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பில் தோல்விப்படமாக அறியப்பட்ட “தம்மு” ஹிந்தியில் வெற்றி பெற்றது ஜூனியர் என்.டி.ஆருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தம்மு எனும் ஜூனியர் என்.டி.ஆரின் திரைப்படம் சுல்தான் என்ற பெயரில் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டது. இப்படம் யூடியூபில் வெளியிடப்பட்டு ஒன்றரை மாதத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் ரூ 30 கோடி லாபமும் கிடைத்துள்ளதாம். ஜூனியர் என்.டி.ஆரின் தோல்வி படம் ஒன்று ஹிந்தி ரசிர்கர்களை கவர்ந்து லாபமும் ஈட்டியது டோலிவுட் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.