இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பரணி ஜெயபால் இயக்கத்தில் பிரேம்ஜி நடித்து வந்த படம் டக்கர். இப்படத்தில் வடிவேலுவின் தெனாலிராமன் படத்தில் நாயகியாக நடித்த மீனாட்சி தீக்ஷித் நாயகியாக நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் கடந்த ஆண்டே தொடங்கப்பட்டது. ஆனால் சில பிரச்சினைகளால் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்னும் 20 நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடுமாம்.
மேலும், இப்படத்தில் ரேசராக நடிக்கும் பிரேம்ஜி அமரன் கதைப்படி ஹீரோ இல்லையாம். ஒரு முக்கியமான கேரக்டரில்தான் நடிக்கிறாராம். ஆனால், தன்னுடன் சில காமெடியன்களையும் சேர்த்துக்கொண்டு இதுவரையில்லாத அளவுக்கு காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறாராம் பிரேம்ஜி. அதனால் மாங்கா, நாரதன் என சில படங்கள் தன்னை ஏமாற்றிய போதும், இந்த டக்கர் படம் தனக்கு டக்கரான படமாக அமையும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் பிரேம்ஜி.