பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை டெய்சி ஷா கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வருகிறார். இருந்தும் அவர் விரும்பும் படியாக கதாபாத்திரங்கள் ஏதும் இதுவரை அவருக்கும் அமையவில்லையாம். சமீபத்தில் பேட்டி ஒன்றில், தான் காதல் கதைகளில் நடிக்க விரும்புவதாக டெய்சி கூறினார். அப்போது அவர், பக்கத்து வீட்டு பெண்ணை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடிய வேடங்களில் நடிக்க முயற்சிக்கிறேன். ஆனால் கார்ப்பரேன் பெண் போன்ற வேடங்களிலேயே இதுவரை நடித்துள்ளேன். வித்தியாசமான காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். காதல் கதைகளில் பாடல்கள் மிக நன்றாகவும், மென்மையாகவும் இருக்கும். அது போன்ற பாடல்களில் இதுவரை நான் நடித்ததில்லை. இந்தியில் மட்டுமல்ல தென்னிந்திய படங்களிலும் அது போன்று நான் நடித்ததில்லை. ரொமான்டிக் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதனால் கூட எனக்கு வந்திருக்கலாம் என்றார். டெய்சி கடைசியாக ஹேட் ஸ்டோரி 3 படத்தில் நடித்திருந்தார்.