சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
ஆன்கன் 2 படத்தில் இருந்து நடிகர் ஜான் ஆப்ரகாம் விலகி உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தோம். தற்போது, ஜான் ஆப்ரகாமை தொடர்ந்து நடிகர் நவாசுதீன் சித்திக்கும் அப்படத்தில் இருந்து விலகி உள்ளாராம். இப்படத்திற்காக தயாரிப்பாளர்கள் பேசிய சம்பளம் நவாசுதீனுக்கு திருப்திகரமாக இல்லையாம். நவாசுதீன் சித்திக்கிற்கு தற்போது நிறைய பட வாய்ப்புக்கள் வந்து கொண்டிருப்பதால், ஆன்கன் 2 படத்தை விட நல்ல சம்பளம் தருபவர்களுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம் என அவர் முடிவு செய்துள்ளாராம். இதனால் தற்போது ஆன்கன் 2 படத்தில் நடிக்க அமிதாப் பச்சனையும், அனில் கபூரையும் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். தற்போது நவாசுதீன் சித்திக் நடித்துள்ள ராமன் ராகவ் 2 படம் ஜூன் மாதம் 24ம் தேதி ரிலீசாக உள்ளது.