'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இது இரண்டாம் பாகங்களின் காலம் போலிருக்கிறது. சமீப காலமாக அவ்வப்போது வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளிவந்து கொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு கூட கோ 2 படம் வெளியாகியுள்ளது. தற்போது சிங்கம் 3, சென்னை 28 - 2, எந்திரன் 2 தொடர் பாகங்கள் உருவாகி வருகின்றன. இருந்தாலும் சில படங்களின் தொடர்ச்சியை மீண்டும் எடுக்க மாட்டார்களா என ஏங்க வைக்கும் சில படங்களும் இருக்கின்றன.
அந்த விதத்தில் ரஜினிகாந்தின் பாட்ஷா, கமல்ஹாசனின் இந்தியன் ஆகிய திரைப்படங்கள் வராதா என்ற ஏக்கம் ரசிகர்களிடம் உள்ளது. பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் பற்றி கடந்த வருடம் செய்திகள் அடிபட்டது. ஆனால், அப்படி வருவதற்கு வாய்ப்பில்லை, ரஜினிகாந்த் அதை விரும்பவில்லை, ரசிகர்கள் மனதில் ஒரே பாட்ஷா மட்டுமே இருக்கட்டும் என்று சொன்னதாகத் தகவல் வெளியாகியது.
இப்போது கமல்ஹாசன், ஷங்கர் முதன் முறையாக இணைந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியன் படத்தை தயாரித்த ஏ.எம். ரத்னம் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கப் போவதாகவும், இது சம்பந்தமாக கமல்ஹாசன், ஷங்கர் ஆகியோரிடம் அவர் பேசியுள்ளதாகவும் சொல்கிறார்கள். இந்தியன் திரைப்படம் வெளிவந்து சுமார் 20 வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் அந்தக் கூட்டணி இணைந்தால் நிச்சயம் மீண்டும் ஒரு தரமான படம் கிடைக்கும் என்பதை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.