இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினி நடித்துள்ள கபாலி படத்தில் பல வில்லன்கள் உள்ளனர். அவர்களில் தைவான் நாட்டைச்சேர்ந்த வில்லன் வின்ஸ்டன் ஷாவ் குறிப்பிடத்தக்கவர். தைவான் நாட்டில் பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற அதன்பிறகு சினிமாவுக்கு வந்தவரான இவர், அங்கு இதுவரை 30 படங்கள் வரை நடித்துள்ளார். ஜாக்கிசான், அர்னால்டு போன்ற நடிகர்களுடன் நடித்திருக்கிறாராம். முதன் முறையாக கபாலி மூலம் ஒரு இந்திய படத்தில் அவர் நடித்திருக்கிறார். ஏற்க னவே மிரட்டலான தோற்றம் கொண்ட இந்த வின்ஸ்டன் ஷாவ், சில காட்சிகளில் ரஜினியையே மிரட்டும் வகையில் நடித்திருக்கிறாராம். அந்த வகையில் இவருக்கும் ரஜினிக்கு இணையான பஞ்ச் டயலாக் உள்ளதாம்.
குறிப்பாக, ஒரு காட்சியில், உன்னை ஒரேயொரு நாள் விடுறேன். உன் குடும்பத்தோட நிம்மதியா தூங்கு - என்பதுதான் அந்த டயலாக்காம். அதற்கு ரஜினியும் தனது பாணியில் ஒரு அதிரடியான பஞ்ச் டயலாக் பேசுவாராம். அது கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் வெளியில் விடாமல் வைத்திருக்கிறார்கள். மேலும், இந்த தைவான் வில்லன், தனக்கான டப்பிங்கை சென்னை வந்து பயிற்சி எடுத்து பேசிவிட்டு சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.