பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
லிங்கா எந்த அளவுக்கு ரஜினியை சறுக்கி விட்டதோ, அதே அளவுக்கு கபாலி அவரை உயரத்துக்கு கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கையை அப்படத்தின் டீசர் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வெளியான விஜய்-அஜீத் படங்களின் சாதனையை ரஜினி படம் முறியடித்திருப்பதால், இந்த படத்தை சரியான தேதியில் வெளியிட வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை தொடர்ந்து நடந்து வந்தது.
அந்த வகையில், ஜூலை 6-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்த கபாலி படத்தை இப்போது ஜூலை1-ந்தேதியில் வெளியிட அப்படக்குழுவினர் முடிவெடுத்து விட்டார்கள். காரணம், ஜூலை 6-ந்தேதி இந்தியில் சல்மான்கான் நடித்த சுல்தான் படம் இந்தியா முழுக்க அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறது. அதனால் அந்த நேரத்தில் ரஜினி படத்தையும் வெளியிட்டால் தியேட்டர் பிரச்சினை வரக்கூடும் என்பதால் ஜூலை1-ந்தேதியே வருகிறாராம் கபாலி. தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளிலும் கபாலியை அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்களாம்.