'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் நடிப்பில் தமிழில் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. சிரஞ்சீவி தனது 150வது படத்தில் நடிக்க பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். இடையில் கத்தி படத்தைப் பார்த்து அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விரும்பினார். பின்னர் கத்தி படத்தில் கதை திருட்டு சர்ச்சை இருந்ததை அறிந்த சிரஞ்சீவி அப்படத்தில் நடிக்க தயங்கினார். இருப்பினும் எந்த கதையும் கிடைக்காததால் சர்ச்சைகளைப் பொருட்படுத்தாமல் கத்தி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் ராம் சரணும் லைக்கா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் இசையமைப்பிற்கான பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் துவங்கிவிட்டார். சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான தேவிஸ்ரீ பிரசாத் ஹிட் பாடல்களைக் கொடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். விரைவில் இப்படத்திற்காக படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் நாயகிக்கான தேடலில் தற்போது படக்குழு ஈடுபட்டுள்ளது.