ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் திறமையான, பல்துறை வித்தக நடிகர்கள் இர்பான்கானும், நவாசுதீன் சித்திக். இவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாதாரி' மற்றும் 'டீன்'. இந்த இரண்டு படங்களும் ஜூன் 10ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. சமீபத்தில் மாதாரி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இப்படத்தின் தயாரிப்பாளரும், இர்பானின் மனைவியுமான சுதாபா சிக்தார் கூறும்போது... ''டீன் படத்தின் தயாரிப்பாளர் சுஜாய் கோஷ் என்னுடைய நண்பர் தான். அருடைய படமான டீன் படத்துடன் மோத வேண்டும் என்பதற்காக நாங்கள் எங்களுடைய படத்தை ரிலீஸ் செய்யவில்லை. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. மற்ற தேதிகளில் எங்களது படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல். அதனால் தான் மாதாரி படம் டீன் படமும் ஒரே நாளில் ரிலீஸாக இருக்கிறது. இருந்தாலும் இரண்டு படங்களின் கதை வெவ்வேறானவை, ஆகையால் கண்டிப்பாக இரண்டு படங்களும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.