நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் காமெடியனாக புகழ் பெற்றவர் சூரி. அவர் வளர்ந்து வந்தபோது சந்தானம் முன்னணி காமெடியனாக இருந்தார். ஆனபோதும் தனக்கென சில ஹீரோக்களை பிடித்துக்கொண்டு அவர்களுடன் படம் முழுக்க வந்து கலக்கினார் சூரி. குறிப்பாக, விஷால், சிவகார்த்திகேயன், விமல், உள்ளிட்ட சில ஹீரோக்களுக்கு சூரிதான் பிரதான காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆனபோதும், ரசிகர்கள் தியேட்டரில் தான் நடிக்கும் காமெடியைப்பார்த்து கைதட்டி சிரித்து விட்டு செல்வதோடு இல்லாமல், தியேட்டரை விட்டு வெளியேறிய பிறகும் தான் அவர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று நினைத்த சூரி, தற்போது காமெடி மட்டுமின்றி குணசித்ர வேடங்களிலும் நடிப்பதில் ஆர்வத்தை திருப்பியிருக்கிறார். அந்த வகையில், முத்தையாவின் மருது படத்தில் குணசித்ர நடிப்புக்கு பிள்ளையார் சுழிபோட்டுள்ள சூரி, இனிமேல் காமெடி, குணசித்ர வேடம் என இரண்டுவிதமான கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.