'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் கௌதம் மேனன் தமிழ்ப் படங்களை ஆங்கிலப் படங்கள் அளவிற்கு எடுப்பார் என்பார்கள். ஆனால், அவர் பல ஆங்கிலப் படங்களை அப்படியே காப்பியடித்து தமிழுக்குத் தந்தவர் என்பதும் பலருக்கும் தெரியும். அவரிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்த மணிகண்டன், மணி நாகராஜ் என்ற பெயரில் இயக்கி நேற்று வெளிவந்த படம் 'பென்சில்'. இப்படம் '4th period mystery' என்ற கொரியன் படத்தின் அப்பட்டமான காப்பி என்பது தெரிய வந்துள்ளது. 2009ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தின் கதையும், 'பென்சில்' படத்தின் கதையும் ஒரே கதைதான்.
ஆனால், 'பென்சில்' படத்தின் டைட்டில் போடும் போது சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை எனப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். எங்கே இந்தப் படத்தைக் காப்பிக் கதை என்று சொல்லிவிடுவார்களோ என்பதற்காக தமிழ்நாட்டில் நடந்த சில உண்மைச் சம்பவங்களைச் சேர்த்திருக்கிறார்கள்.
இணையதளப் பயன்பாடு இளைஞர்களிடம் அதிகமாக வந்துவிட்ட இந்த சமயத்தில் 'காதலும் கடந்து போகும்' போன்ற படங்கள் ரீமேக் ரைட்ஸ் வாங்கி தயாரிக்கப்பட்ட பிறகும் 'பென்சில்' போன்ற காப்பி படங்களை எடுப்பது தமிழ் சினிமாவுக்கு ஏற்படும் ஒரு இழுக்கு என்பதுதான் உண்மை.
இம்மாதிரி காப்பி படங்களை எடுப்பதன் மூலம் தங்களுக்கும் பெயர் கிடைக்காமல், தமிழ்த் திரையுலகத்திற்கும் கெட்ட பெயரை ஏற்படும்படி நடந்து கொள்கிறார்களே உண்மையான சினிமா ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். எப்போதுதான் இந்த 'காப்பி'யை நிறுத்துவார்களோ ?