சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
அரண்மனை-2 படத்திற்கு பிறகு ஹன்சிகா நடித்த போக்கிரிராஜா, உயிரே உயிரே, மனிதன் போன்ற படங்கள் அவருக்கு எதிர்பார்த்தபடி வெற்றியை கொடுக்க வில்லை. அதனால் அடுத்தபடியாக அவர் கைவசம் ஜெயம்ரவியின் போகன் மட்டுமே உள்ளது. இதற்கு முன்பு அவர் ஜெயம்ரவியுடன் நடித்த எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட் ஆகிய படங்கள் வெற்றியாக அமைந்ததால் இந்த போகன் படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார் ஹன்சிகா.
மேலும், திடுதிப்பென்று படவாய்ப்புகள் குறைந்து விட்டதால், அடுத்தபடியாக கதாநாயகி என்பதில் இருந்து விடுபட்டு மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் இன்னொரு ரவுண்டு வர முடிவு செய்திருக்கிறார் ஹன்சிகா. அதையடுத்து தனக்கு ஏற்கனவே வாய்ப்பு கொடுத்த சில முன்னணி டைரக்டர்களை சந்தித்து, வித்தியாசமான கேரக்டர்கள் கொடுத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ள ஹன்சிகா, தற்போது திரிஷா நடித்து வரும் சில படங்களை சுட்டிக்காட்டி அந்த மாதிரியான கதைகளில் நடிக்க அதிக ஆர்வமாக உள்ளேன் என்றும் கூறியிருக்கிறாராம்.